திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை மூட நடவடிக்கை

 கொவிட்-19 அச்சம் காரணமாக திக்கோவிட்ட மீன்பிடித துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே இந்த தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மீனவர் 5 மீனவர்களுடன் படகில் சென்ற போது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ‍வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அவர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனையவர்களிடம் பரிசாதனைகள் மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

28 வயதான மாரவில பகுதியைச் சேர்ந்த மீனவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.