யாழில் ரிஎன்ரி வெடிமருந்து, டெடனேற்றர்கள் மீட்பு


 யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடிமருந்து 4 கிலோ கிராம் மற்றும் டெடனேற்றர் 10 என்பன சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்ககப்பட்டுள்ளன.

“யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையில் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள குளத்தின் அருகில் இந்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.