நீர்கொழும்பு கடலில் மாயமான இளைஞர்கள் மூவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

 நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று கா ணாமல்போன மூன்று இளைஞர்களில் இருவர் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முத்துகுமார் சிந்துஜன் வயது (24) மற்றும் மனோகரன் சசிகுமார் வயது(22) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக தனது ஏழு நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தீடீரென அலைக்குள் சி க்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு கா ணாமல் போயுள்ளனர்.

கா ணாமல்போன இளைஞர்கள் மூவரில் மற்றுமொருவர் பதுளை, நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கா ணாமல்போனவர்களை தேடும் பணிகளை நேற்று மாலை கடற்படையினரும் சுழியோடிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து மேலதிக வி சாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.