ஹட்டனில் இசை நிகழ்ச்சியால் வந்த சிக்கல்: அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன பகுதி பாடசாலையொன்றில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனவில் உள்ள ஒரு சுற்றுலா பங்களாவில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்களும் இந்த குழுவில் உள்ளனர்.

பழைய மாணவர்கள் செப்டம்பர் 26 ஆம் திகதி ஆசிரியர்களுக்காக ஒரு விழாவை நடத்தினர். அதில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விருந்தில் பங்கேற்ற இசைக் குழு, அதற்கு முதல் நாள் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட மற்றொரு விருந்தில் இசை நிகழ்ச்சி நடத்தியது.

மறுநாள் கினிகத்தேனவில் இசை நிகழ்ச்சி நடத்தியது. இதில் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த இசைக்குழு உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.