பிரித்தானியாவில் மருத்துவருக்கு கொரோனா!

 


பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த மருத்துவர் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் நிலையானது கேள்வி குறியாகியுள்ளது.

பாஸெம் எனானி என்ற எகிப்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பிரித்தானியாவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவியதையடுத்து, பிரித்தானியாவின் தொற்றுக்ககு எதிரான போராட்டத்தில் எனானி தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

இந்நிலையில் ஓய்வில்லாமல் பணியை மேற்கொண்ட எனானி தற்போது கொரோனா தொற்றுடன் குய்லின்-பார் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனானியின் பணி ஒப்பந்த காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், அவருடைய மனைவி, மற்றும் நான்கு பெண் குழந்தைகளின் நிலை பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

அவர்கள் விரைவில் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என்கிற அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இதன் காரணமாக 44 வயதான இதயநோய் நிபுணர் பாசெம் எனானிக்கு நிதி உதவி பெற நிதி திரட்டும் பிரச்சாரத்தினை அவரது நண்பர்கள் தொடங்கியுள்ளனர்.

எனானியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஊழியர்கள் creadits- Mirror
“தற்போது நடந்துகொண்டிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கனவு போல உள்ளது. எனது திறமையான கணவருக்கு இது போன்ற ஒரு நெருக்கடி சூழல் வரும் என நாங்கள் ஒருபோதும் கருதவில்லை.” என எனானியின் மனைவி தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் தனது வேலையை மிகவும் நேசித்தார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் கூட இணையதள வாயிலாக வீட்டிலிருந்தே பணி புரிந்தார்.” என்றும் மனைவி கூறியுள்ளார்.

எனானி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை Creadits-Mirror
இந்த சம்பவத்தினை தொடர்ந்து, எனானியின் நண்பர்கள் பலர் தங்களால் முடிந்த அளவில் பணம் திரட்டி தொடங்கியுள்ளனர்.

எனானியை பாதித்துள்ள நோயானது அவரது உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்துவிடும். இதற்காக அவர் வருடகணக்கில் கூட சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் நண்பர்களின் முயற்சியால் தற்போது வரை 30,000 டொலருக்கும் குறைவான தொகையே திரட்ட முடிந்துள்ளது.
விசா பிரச்னை குறித்து பிரித்தானிய உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர், “டாக்டர் எனானி இங்கே முற்றிலும் சட்டப்பூர்வமாக இருக்கிறார், இங்கிலாந்தில் தங்குவதற்கு எல்லா உரிமையும் அவருக்கு உண்டு.” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.