திருமலையில் நகை, பணத்தைத் திருடியவருக்கு விளக்கமறியல்

 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து பவுன் தங்க நகையும், இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தினையும் திருடிய நபரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் ரந்திக லக்மால் ஜயலத் இன்று(13) உத்தரவிட்டார்.

ஆனந்தபுரி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கெதிராக ஏற்கனவே திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேக நபர் வீடொன்றினை உடைத்து இரண்டரை இலட்சம் ரூபாய் பணமும், ஐந்து பவுண் தங்க ஆபரணங்களையும் திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.