தேர்தல் முடிவை மாற்ற நினைக்கும் அமெரிக்கர்கள்!!
தேர்தல் நாளன்று நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கவும், வாக்காளர்கள் சுலபமாக வாக்களிக்கவும், தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது.
அதிபர் தேர்தலில் தாங்கள் அளித்த வாக்கை மாற்ற முடியுமா என ஏராளமான அமெரிக்கர்கள் இணையத்தில் தேடியிருப்பது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாறியது நெஞ்சம்; மாற்றியவர் யாரோ என்ற பிரபலமான பழைய பாடலைப் போல அமெரிக்க வாக்காளர்களின் நெஞ்சமும் திடீரென மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் பைடன் இடையிலான போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
நடப்பு தேர்தலில் பைடனுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வந்த நிலையில், நான் அளித்த வாக்கை மாற்ற முடியுமா? என ஏராளமான வாக்காளர்கள் இணையத்தில் தேடியிருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் தேடுதளத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து பலர் தாங்கள் அளித்த வாக்குகளை மாற்ற முடியுமா எனத் தேடிய தகவல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் வெளியானது. குறிப்பாக ட்ரம்ப், பைடன் இடையேயான கடைசி விவாத நிகழ்ச்சிக்குப் பின் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.
எல்லா பந்துகளையும் அடித்து ஆடும் ட்ரம்ப் இதனையும் விட்டுவிடவில்லை. இந்த தகவல் வெளியான உடன் ட்விட்டரில் பதிவிட்ட ட்ரம்ப், "இரண்டாவது விவாத நிகழ்ச்சிக்குப் பின் நான் எனது வாக்கை மாற்ற முடியுமா? என்னும் தேடல் கூகுளில் ட்ரெண்டாகி வருகிறது. இது வாக்காளர்கள் என் பக்கம் மாறுவதைக் குறிக்கிறது" என்று அடித்து ஆடினார்.
உண்மையில் அவ்வாறு மாற்றி வாக்களிக்க அமெரிக்காவின் பல மாகாணங்களில் அனுமதி உண்டு என்பதுதான் ஆச்சரியமான உண்மை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை