மாந்தை தவிசாளர் ரிஷாட்டின் கைதுக்கு எதிர்ப்பு!
ரிஷாட் பதியுதீன் எம்பி கைது எெய்யப்பட்டமைக்கு மன்னார் – மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில்,
“மக்களுக்கு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக்கொடுத்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கின்றோம். வாக்களிக்க மக்களின் போக்குவரத்திற்காக அப்போது அரசில் இருந்த பிரதமரின் அனுமதி நிதி அமைச்சரின் அனுமதி பெற்றுத்தான் மக்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகமென்ற காரணத்தினால் அவரை மட்டும் கைது செய்து விசாரணை செய்வது சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதியாக கருதுகின்றோம். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட மூவரையும் விசாரணை செய்திருக்க வேண்டும்.” – என்றார்.
கருத்துகள் இல்லை