வாழைப்பூவின் மகத்துவம்!!
வாழைப்பூ வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக இருக்கும். பொடியாக நறுக்கிச் சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவிய தண்ணீரையோக் கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக இறங்கி விடும். அதன் பிறகு, அதை அவித்துப் பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு சுவையாக இருக்கும். பேயன் வாழைப்பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி) சமைத்துச் சாப்பிட லாம்.
* வாழைப் பூவைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எரிச்சல் நீங்கும். வாழைப் பூவை நறுக்கிச் சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டாலும் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.
* வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்குச் சஞ்சீவி போன்றது.
* வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தெரியும்.
* வாழைப்பூவை இடித்துச் சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடமிட்டால் எரிச்சல் போகும்.
* வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- சுதா தாமோதரன்,
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை