வழக்கை வாபஸ் வாங்கிய சுமந்திரன்! டீல் என்ன?

 மணிவண்ணன் யாழ் மாநகரசபை உறுப்பினராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விகிதாசார பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட பின்பு, சுமந்திரனின் ஏற்பாட்டில் கொழும்புத்துறையை சோ்ந்த ஒருவா் மூலம் மணிவண்ணன் சபை எல்லைக்கு வெளியே வசித்துக் கொண்டு போலியான ஆவணங்களைச் சமா்ப்பித்து தோ்தலில் போட்டியிட்டதாகவும், அதனால் அவரது உறுப்புரிமையை நீக்குமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மணிவண்ணனின் உறுப்புரிமையை நீதிமன்று தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. வழக்குகள் நீதிமன்றில் தொடா்ச்சியாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் வழக்கு வழக்குத் தொடுனரால் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. 

மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மணிவண்ணன் மீதான வழக்கை சுமந்திரன் வாபஸ் வாங்கக்கூடும் என்ற எதிா்பாா்புக்கள் பாராளுமன்றத் தோ்தலின் பின் நிலவியிருந்தது. அதற்கு கூட்டமைப்பினா் மறுப்புத் தெரிவித்த நிலையில் தற்போது வழக்கு சுமந்திரனால் வாபஸ் வாங்கப்பட்டுள்ளமையானது மணிவண்ணனுக்கும் - சுமந்திரனுக்கும் இடையில் டீல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் உறுதி செய்பனவாக உள்ளது.

பாராளுமன்றத் தோ்தலிற்கு முன்னரும், பின்னரும் சில தடவைகள் திருகோணமலையில் சம்பந்தன், குகதாசன் மற்றும் தமிழரசுக்கட்சியின் ஏனைய சிலரையும் மணிவண்ணன் மூடிய அறைக்குள் சந்தித்து உரையாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனோல்ட்டுக்கும் சுமந்திரனுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வருட இறுதியில் மணிவண்ணன் சுமந்திரனால் மேயா் ஆக்கப்படலாம் என்ற கருத்துக்கள் தற்போது பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தான் மேயராகுவதற்கு சபை உறுப்பினா்களின் வாக்கு தேவை என்பதால் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒரு வருட விகிதாசார உறுப்பினராக நியமிக்கப்பட்டவா்களை பதவிக்காலம் முடிந்த பின்பும் பதவி விலகாமல் இருக்குமாறு மணிவண்ணன் அறிவுறுத்தினாரா என்பதும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக பலா் கருத்துக்களை தெரிவித்துள்ளனா்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.