இளம் மருமகளை அடித்து கொன்ற கொடூர குடும்பம்!

 இந்தியாவில் திருமணமான 24 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவன் தான் அவரை கொலை செய்துவிட்டார் என பெண்ணின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

அசாமை சேர்ந்தவர் அஜந்தா லக்கர் (27). இளம்பெண்ணான இவரும் அபிஜித் (35) என்பவரும் காதலித்து வந்த நிலையில் 24 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் தம்பதி டெல்லிக்கு வந்தார்கள்.

இந்த நிலையில் அஜந்தா தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக அஜந்தாவின் குடும்பத்தார் கூறுகையில், அபிஜித்துக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

தனது முதல் மனைவியை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் துன்புறுத்தியதால் கடந்த 2004ல் அபிஜித்திடம் இருந்து அவர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்.

இந்த விடயத்தை மறைத்து தான் அஜந்தாவை அபிஜித் மணந்துள்ளார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அஜந்தாவை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கொன்றுவிட்டனர், அஜந்தாவின் உடலில் காயங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து அபிஜித்தை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.