சாதிய பாகுபாட்டிற்கு எதிராக வைரமுத்து ஆவேசம்!!

 


கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை நாற்காலியில் உட்கார வைக்காமல் தரையில் உட்கார வைத்ததாக புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:


பட்டியலினத்துத் தாயொருத்தி

தரையில் வீசப்படுவதா?


அவரென்ன மண்புழுவா?


தலைவியாய்க் கூட அல்ல...

மனுஷியாய் மதிக்க வேண்டாமா?


என் வெட்கத்தில்

துக்கம் குமிழியிடுகிறது.


தேசியக்கொடி அரைக்கம்பத்தில்

பறக்க வேண்டிய

துயரங்களுள் இதுவும் ஒன்று


இதே சம்பவம் குறித்து நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில், ‘ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்’ என்று கூறியுள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.