நாடாளுமன்றம் பொது இடமில்லை – பவித்ரா சஜித்துடன் முரண்!



அண்மையில் அரசால் வெளியிடப்பட்ட கொரோனா (கொவிட்-19) சட்ட வர்த்தமானி நாடாளுமன்றத்துக்கும் பொருந்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றிலும் வர்த்தமானி நடைமுறையை கடைப்பிடித்து முகக்கவசம் அணிவதுடன், இடைவெளி பேணப்பட வேண்டும். அது பின்பற்றப்படவில்லை எனவே நாடாளுமன்றை ஒத்திவையுங்கள் என்று சஜித் தெரிவித்தார்.

எனினும் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது, பிரித்தானியாவிற்கு தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேளையில் கூட, அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

சஜித்தின் கருத்துக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அது பொது இடங்களுக்கு மட்டுமே பொருந்தும், நாடாளுமன்றுக்கு பொருந்தாது. அவர் வர்த்தமானியை சரியாக வாசிக்காமல் பேசுகிறார் என்று தெரிவித்தார்.

இதனால் இருவரிடையிலும் முரண்பாடு ஏற்பட்டது, நாடாளுமன்றம் பொது இடம் இல்லையா. நாடாளுமன்றிற்கு குறித்த சட்டம் பொருந்தாது என்றும் கூறுகிறார், பின்னர் எம்மை பொறுப்புடன் செயற்படுமாறும் இரட்டை நிலைப்பாட்டில் பேசுகிறார் என்று சஜித் பதிலளித்து அமர்ந்தார்.

இதன்போது நாடாளுமன்றில் சஜித், பவித்ரா, சபாநாயகர் உள்ளிட்ட பலர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.