உந்துருளியை பதம் பார்த்தது காட்டுயானை

 
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சம்மளங்குளம் பகுதியில் மாலை வேளைகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


மாலை 5.30 மணிக்கு ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் சம்மளங்குளம் பகுதியில் வருகைதரும் யானைகள் மக்களை அச்சுறுத்துவதுடன் வாழ்விடங்களில் உள்ள பயன்தரு மரங்களையும் நாசம் செய்து வருகின்றன.


12.10.2020 அன்று மாலை வேளை சம்மளங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து முதன்மை வீதிக்கு செல்லும் போது வீதியின் ஓரத்தில் நின்ற காட்டுயானை துரத்திவந்துள்ளதால்


உந்துருளியினை போட்டுவிட்டு தப்பிஓடியுள்ளார் இதன்போது குறித்த உந்துருளியினை காலால் மிதித்து முற்று முழுதாக சேதப்படுத்தியுள்ளது.


சம்மளங்குளம் பகுதியில் நாள்தோறும் காட்டு யானையின் தொல்லை அதிகரித்து வருவமாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Blogger இயக்குவது.