முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயம்

 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

வட்டகொட பிரதேசத்திலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி வேகமாக பயணித்த முச்சக்கரவண்டி அதன் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தலவாக்கலை - பூண்டுலோயா  பிரதான வீதியின் ஹொலிரூட் பகுதிக்கு  அருகில் உள்ள கற்பாறையின் மீது மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. 

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.Blogger இயக்குவது.