நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்!

 தமிழகத்தில் தொழிலதிபர்களை தனியாக வரவழைத்து, அவர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் விசைத்தறி நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவருக்கு பெண் ஒருவர் போன் செய்தார். தனக்கு மொத்தமாக பெட்சீட் வேண்டும் என்றும் நேரில் வந்து ஆர்டர் எடுத்துக் கொண்டு அட்வான்ஸ் வாங்கிச் செல்லுங்கள் என்று போனில் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் கூறிய முகவரிக்கு தொழிலதிபர், தன்னுடைய உறவினர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவர் கூறிய முகவரியை அடைந்த போது, அங்கிருந்த ஆண்கள் சிலர் அவரை தாக்கி ஆடைகளை களைத்து, குறித்த பெண்ணை கட்டிப்பிடிக்க செய்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

அதன் பின், அந்த தொழிலதிபரிடம், இந்த புகைப்படத்தை எல்லாம் இணையத்தில் போட்டுவிடுவோம், ஒழுங்காக தாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிடு, என்று மூன்று லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை, நாளை பணம் கொண்டு வருகிறேன் என்று அப்போதைக்கு கூறி அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, உடனடியாக பொலிசார் அவருக்கு வந்த போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் குற்றச் செயலில் ஈடுபட்டது வெண்ணிலா(27), அவரது நண்பர்களான தூத்துக்குடி இசக்கிபாண்டி(30), நெல்லை இசக்கிமுத்து(27), ஜெபராஜ்(24), சின்னதுரை(29) என்பது தெரியவந்ததால், இவர்கள் அனைவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.