மாமழை - கவிதை!!
பத்துமணி வெய்யிலிலும்
பகலிருளாய் தெரியுது
அத்தனை முகிலுஞ்சேர்ந்து
அடைமழையாய் பொழியுது
சத்தமின்றி ஆறுகுளம்
சடுதியாக நிறையுது
எத்தனையோ துன்பம்வரினும்
இரசித்திடவே தோணுது
சுத்தமான நீரைப்பெற்று
சமுத்திரவயிறு நிரம்புது
நித்தமுமே ஆவியாக்கி
நீரை வானுக்கனுப்புது
கொத்துக்கொத்தாய் மரங்களுமே
கொடியவறட்சி போக்குதுநாம்
கத்துக்கவே இயற்கையெலாம்
காட்சியாக தெரியுது
சட்டச்சட சட்டச்சட
சத்தமங்கே கேட்குது
சரிகமபா இராகத்திலே
சங்கீதமழை பொழியுது
மெட்டுபோட்டு பாடலொன்று
மெல்லப்பாடத் தோணுது
முட்டமுட்ட பூமியெங்கும்
முழுமழையில் நனையுது
இத்தனைக்கும் இந்தப்படம்
ஈழமல்ல தெரியுது
நித்திலத்தின் அழகுதேசம்
நிதர்சனமாய் விளங்குது
சுத்திப்பார்க்க சுந்தரமாம்
சுவிற்சலாந்து இருக்குது
சத்தியமாய் நான்வசிக்கும்
சப்கவுசன் தெரியுதா..?
தம்பலகமம் கவிதா.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை