ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை சுய தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

 கொழும்பு, ஸ்ரீ ‍ஜெயவர்தனபுர பல்கலைக்கழக, விடுதிகளில் உள்ள முகாமைத்துவ பீட மாணவர்களை சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 50 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தற்போது பி.சி.ஆர். முகாமைத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களிடத்திலும் பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Blogger இயக்குவது.