கிர்கிஸ்தானில் அவசரகால நிலை அறிவிப்பு!
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நிலவிய அமைதியின்மை மற்றும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு எழுந்த கோரிக்கையை அடுத்து தலைநகர் பிஷ்கெக்கில் இன்றுமுதல் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஊரடங்கு உத்தரவு மற்றும் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணி முதல் வரும் 21ஆம் திகதி காலை எட்டு மணிவரை அமுலில் இருக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜீன்பெகோவ் (Jeenbekov) அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஜீன்பெகோவின் உத்தரவில் எத்தனை பாதுபகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படவில்லை.
எனினும், அவர்களுக்கு இராணுவ வாகனங்களைப் பயன்படுத்தவும் சோதனைச் சாவடிகளை அமைக்கவும் ஆயுத மோதல்களைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தானில் கடந்த நான்காம் திகதி தேர்தல் வாக்கெடுப்பு புதிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆர்ப்பாட்டங்களையும் அமைதியின்மையையும் தூண்டியுள்ளதுடன் போராட்டங்களில் இதுவரை ஒருவர் உயிரிழந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் போரோனோவ் மற்றும் அவரது அமைச்சரவையை இன்று தள்ளுபடி செய்யும் உத்தரவில் ஜனாதிபதி ஜீன்பெகோவ் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே அவசரகால நிலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை