இந்தியரின் வருகையால் கொரோனா தொற்று ஏற்படவில்லை!

 


மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியரின் வருகையால் கொரோனா தொற்று அந்த பகுதியில் பரவியதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என   சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்தியர் ஒருவர் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தமை தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து பார்த்தோம், அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மினுவாங்கொடையில் கொவிட் – 19 வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் சிலர் அடையாளம் காணப்படுவதனால் நாட்டை முடக்கும் நிலை ஏற்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு   சவேந்திர சில்வா  பதிலளித்தார்.

இதுவரையில் அவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை 24 மணித்தியாலலும் அரசாங்கம் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நோயை கட்டப்படுத்துவதற்கான சகல சுகாதார நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.


மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவர் தங்கியிருந்த இடத்திற்கு இந்த பெண் சென்றிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Blogger இயக்குவது.