கட்டுக்குள் வந்தது தென்கொரியாவில் 33 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ!!
தெற்கு தென்கொரிய நகரமான உல்சானில் 33 மாடி கோபுரத் தொகுதி வழியாக ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரம் 23:00 மணிக்கு தீப்பரவல் ஏற்பட்டது. அதிக காற்று காரணமாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை. உல்சன் தீயணைப்புத் துறையின்படி, புகை உள்ளிழுத்தல் மற்றும் சிராய்ப்பு போன்ற சிறிய காயங்களுக்காக 91பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
77 பேர் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டனர். மேலும் 82பேர் அருகிலுள்ள ஹோட்டலுக்கு வெளியேற்றப்பட்டதாக நாட்டின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
13 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பலத்த காற்று ஆரம்பத்தில் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 120 வீடுகள் மற்றும் சந்தை பிரிவுகளைக் கொண்ட சம்வான் ஆர்ட் நோவியோ வணிக மற்றும் குடியிருப்பு கட்டடத்தின் 8 மற்றும் 12ஆவது தளங்களுக்கு இடையே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை