சட்டத்தை மீறினால் ஆறுமாத கால சிறைத்தண்டனை!


 17/10/2020 சனிக்கிழமை இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு நான்கு வாரம் நடைமுறையில் இருக்கும், நாடாளுமன்ற ஒப்புதலின் பின்னர் டிசம்பர் ஒன்று வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது,

சான்றிதழ் இல்லாமல் ஊரடங்கு உத்தரவின் போது வெளியே பிடிபடுபவர்கள் அல்லது விதிவிலக்கு வகைகளில் ஒன்றில் பொருந்தாதவர்கள் முதல் குற்றத்திற்கு ஆரம்ப தண்டப்பணமாக €135 யூரோக்கள் அறவிடப்படும். அதிகபட்சமாக €3,750 யூரோக்கள் தண்டப்பணமும், ஆறுமாத கால சிறைத்தண்டனைக்கும் உள்ளாகலாம்
இந்நிலையில், வியாழக்கிழமை பிரதமர் Jean Castex சில தகவல்களை வெளியிட்டார்.
அதன்படி, நீங்கள் இரவு 9 மணிக்கு பின்பு தொலைதூர பயணம் (பேருந்து, தொடருந்து அல்லது விமான பயணம்) மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பயணச்சிட்டையை காண்பித்து நீங்கள் வெளியேற முடியும். அதற்கு நீங்கள் தனியே 'சான்றிதழ்' எதையும் பெறத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
தவிர, மருத்துவர்கள், தாதியர், மருத்துவ உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள், இரவு நேர பணியாளர்களும் 9 மணியின் பின்னர் வெளியேறலாம் எனவும் Jean Castex தெரிவித்தார்.
மேலும், பயண அனுமதி சான்றிதழ் விரைவில் பிரான்ஸ் அரசாங்க இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பிரதமர் கூறினார்.
படிவம் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் அல்லது கையால் எழுதப்பட்ட பதிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.