அதிகளவானோர் கலந்துகொண்ட சமய தளம் ஒன்றுக்கு கடும் எச்சரிக்கை!!

 


ஹற்றன் பகுதியில் உள்ள பிரபல கத்தோலிக்க மதத்தலம் ஒன்றில் 50க்கு மேற்பட்ட நபர்களை கொண்டு ஆராதனை நடத்திய, அதன் பொறுப்பாளருக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.


குறித்த தேவ ஆராதனையில், 50இற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சமயதலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனைக்குட்படுத்தப்பட்டது.


அதன்போது 145 பேர் இந்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நபர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்த போதிலும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 50 பேரை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததனால் இவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.


இனிவரும் காலங்களில் குறித்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் பொது சுகாதா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.