மீண்டும் தமிழ் ஹீரோவுடன் இணையும் ஐஸ்வர்யாராய்!!

 


பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.


பிரசாந்த் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் இந்த படம் உருவாகுவதாக கூறப்பட்டாலும் தற்போது இந்த படத்தை மோகன் ராஜாவுக்கு பதிலாக ’பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தை இயக்கிய பெடரிக் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது


இந்த நிலையில் ’அந்தாதூன்’ படத்தில் தபு நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார் என்பதும் தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ’அந்தாதூன்’ ரீமேக்கில் பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. மீண்டும் ஐஸ்வர்யாராய் உடன் இணையும் பிரசாந்துக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.