சிங்கப்பூர் – ஜேர்மனி இடையே நேரடி விமானப் போக்குவரத்து!!
சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்துத் திட்டத்திற்கு ‘பசுமை வழித்தடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் இது, பொதுப் பயணிகளுக்கான விமான சேவையாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய வணிகம் மற்றும் ஏனைய வர்த்தக நோக்கத்திற்காகவும் பரஸ்பர அலுவலகப் பணி நிமித்தமாக செல்பவர்களுக்காகவுமே இந்த நேரடி விமான சேவை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிங்கப்பூர்-ஜேர்மனி இடையே உடன்பாடு எட்டப்பட்டிருப்பதோடு இரு தரப்பிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை