8000 ஐ கடந்தது கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை!!
நாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,152 ஆக பதிவாகியுள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 265 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 15 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 4,203 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் மேலும் 130 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை