கொரோனா சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் தந்தைக்கும் தொற்று!

 


கொழும்பு, ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையின் தந்தைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிறந்து ஐந்து மாதங்களேயான குறித்த குழந்தைக்கு, கடந்த ஓகஸ்ட் தொடக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தற்காலிகமாக கொடிகாவத்தை பிரதேசத்தில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையே, இவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை மற்றும் தாய்க்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த குழந்தை சிகிச்சை பெறும் விடுதியின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிஜ்வே ஹார்யா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.