களுத்துறையில் அதிகரித்த கொரோனா ​தொற்று!

 


களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 166 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே இதனைத் தெரிவித்துள்ளார்.  ​


இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர், மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 130 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,933 ஆக அதிகரித்துள்ளது.


அவர்களில் 92 பேர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 7,872 பேரில் 9,323 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.