கொழும்பு புத்தக கண்காட்சிக்கு சென்றவருக்கு கொரோனா!!

 


கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு தனியாக சென்றவருக்கு கொரோனா ​தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த நபர் கடந்த 23ஆம் திகதியன்றே, புத்தகக் கண்காட்சிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன், புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் ஆகியவற்று அன்றையதினம் சென்றுள்ளார்.


மேலும், செப்டெம்பர் 30ஆம் திகதியன்று நுவரெலியாவுக்கும் சென்றுள்ளார்.


இந்தநிலையில் 36 வயதான குறித்த நபர், சிலாபத்திலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்தே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.