மாவையின் மகன் பிரபல அரசியல்வாதிக்கு மருனாகிறார்!!

 


கடந்த பொதுத்தேர்தலில் தனி ஆளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சசிகலா ரவிராஜ் , இனிமேல் அப்படி ஈடுபட தேவையிருக்காது.


ஏனெனில் , தீவிரமாக செயற்படும் ஒரு மருமகன் அவருக்கு கிடைக்கிறார், அது வேறு யாருமல்ல- கலையமுதன் மாவை சேனாதிராசா.


கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராசாவிற்காக பிரச்சாரத்தில் கலையமுதன் மட்டும்தான் ஈடுபட்டார்.


எம்.ஏ.சுமந்திரன் , சிறிதரன் தரப்பு மாவை தரப்பிலிருந்தவர்களையும் வளைத்துப் போட்டு தமக்கு மாத்திரம் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .


இவைதான் மாவை சேனாதிராசா தோல்வியடைய பிரதான காரணம், அப்போது , கலையமுதன் பம்பரமாக சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


கலையமுதனின் வருகையை குடும்ப அரசியல் என தமிழ் அரசு கட்சிக்குள் ஒரு தரப்பு விமர்சிக்கிறது மாவையும் , கலையமுதனும் தந்தை மகன்தான்.


ஆனால் , இன்றுள்ள தமிழ் அரசு கட்சியின் இளைஞர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் ஒரு பிரதேசசபையையோ , மாகாணசபையையோ , நாடாளுமன்றத்தையே குறிவைத்து தமிழ் தேசிய வேடம் போட்டவர்கள்தான்.


கிட்டத்தட்ட தசம வீதத்தை தவிர மிகுதி யாருக்கும் அரசியல் பன்மைத்துவ சிந்தனை கிடையாது .


ஒப்பீட்டளவில் கலையமுதன் இவற்றில் விதிவிலக்கானவர், உண்மையில் அந்த வகையானவர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் அரசு கட்சியை வளப்படுத்தும் .


இப்பொழுது விடயம் என்னவென்றால் - மாவை சேனாதிராசாவின் புதல்வன் கலையமுதனும் , ரவிராஜ்- சசிகலா தம்பதியின் மகள் பிரவீனாவும் இல்லறத்தில் இணையவுள்ளனர் .


அடுத்த மாதத்தின் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் திருமணம் நடக்கும் என நம்பகமான தகவல் .


காதலித்ததாக கூறப்பட்டாலும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாம் அது, இரு வீட்டார் பேச்சிலும் கட்சியின் மூத்த தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி ஆகியோர் ஈடு பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.


நேற்று மற்றும் நேற்று முன்தினம் மாவை சோனாதிராஜாவின் வீட்டில் தீவிர திருமணம் தொடர்பில் தீவிர பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.


எது எப்படி ஆயினும் தென்மராட்சி மருமகனாக கலையமுதன் செல்வது உறுதி என்பதுடன் சசிகலாவின் அரசியலில் அது கூடுதல் பலமாக இருக்கும்.


தென்மராட்சியை சீரழிக்கும் கும்பல் விரைவில் அடையாளம் தெரியாமல் போகும் என சாவகச்சேரி மக்கள் தெரிவிக்கின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.