ஆசை........ஆசை....... - கவிதை!!

 


நிலவின்மேல் நீர்தெளித்து கோலமிட ஆசை!

நிம்மதிஎனும் வீடுகட்டி குடியிருக்க ஆசை! 

நீங்காத வானவில்லாய் நித்தம்இருக்க ஆசை! 

நீலவான தோட்டத்தை குத்தகைஎடுக்க ஆசை! 

எறும்பின்மேல் ஊர்ந்துசெல்ல நெடுநாளாய் ஆசை! 

கரும்பிற்குள் ஒளிந்துகொண்டு கவி பாட ஆசை! 

நெருப்புடுத்தி சூரியனில் நீந்திவர ஆசை! 

விருப்பம்போல உருமாறி உலவிவர ஆசை! 

விரலிடுக்கில் இலைபோட்டு விருந்துவைக்க ஆசை! 

இரவிற்குள் மர இலையை எண்ணிவிட ஆசை! 

வரவிருக்கும் வரலாற்றை தெரிவிக்க ஆசை!

பரம்பொருளை வரவழைத்து வரம்கொடுக்க ஆசை! 

தோகைசெய்து மயிலுக்கு விற்றுமகிழ ஆசை! 

நாகப்புற்றில் நாள்முழுதும் படுத்திருக்க ஆசை! 

வெற்றுடம்பில்  பனிமலையில் தவமிருக்க ஆசை!

நானும் ஆசை கொண்டேன் வித விதமாய் வித்தியாசமாய்..... !!!!


முத்துகிருஷ்ணன் கிராமிய காதலன்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.