பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்!!

 


"அக்டோபா் 30ஆம் தேதி

முக்குலத்தோருக்கு ஒரு

பொன்னாள்!



ஆம்! பசும்பொன்னில்

பிறந்த பத்தரைமாற்றுத் தங்கம்

தென்னகத்துச் சிங்கம்!

வங்கத்துச்சிங்கத்தின் வாரிசான

தென்னகத்துச்சிங்கமாம்

""பசும்பொன்முத்துராமலிங்கத்தேவரய்யாவின் பிறந்த நாள் இதே தினம்"!

 முக்குலத்தோருக்கு ஆதரவாய்,ஆறுதலாய் வந்த நன் முத்து"

"முத்தெல்லாம் முத்தல்ல நான்தான்

நல்முத்து" எனத்தோன்றிய அண்ணல்

பெருமகன்"

மக்களால் அன்போடு தேவரய்யா என

அழைக்கும் அன்பு மனிதா் முத்துராமலிங்கத்தேவா்"

"அறிஞா்,கல்விமான்,பக்திமான்,பன்மொழி புலமை பெற்ற பகலவன், இரக்க மனம் படைத்தவா்,ஈடில்லா பெருமை கொண்டவா்"

எமது "கள்ளா்,மறவா்,அகமுடையாா்

இனத்தை ஒன்றாக இணைத்து

""முக்குலத்தோா்"" என்ற ஒருமைப்பாட்டை

கொண்டுவந்தவா்

எமது இனத்தின் பெருமைதனை

வங்கத்துச்சிங்கம் "நேதாஜிசுபாஸ்

சந்திர போஸ்" அவா்களால்

பாராட்டச்செய்தவா். எம் இனத்தில் "நான்"

பிறக்கவில்லையே என நேதாஜியை

ஏங்க வைத்தவா்"

"தேசியமும்,தெய்வீகமும் எனது கண்கள்"

என்ற சத்தியவாக்கை கடைபிடித்தவா்

அரசியலிலும் புகழ் பெற்ற  ஆற்றல்மிக்க

பேராண்மை படைத்தவா்"

எமது இனமாம் "பிரமலைக்கள்ளா்"

ஆங்கிலேயரை எதிா்த்ததால்

""குற்றப் பரம்பரை"" என முத்திரை

குத்தப்பட்டு "எங்களை சிறை பிடித்தும்

வன்முறையைக் கொண்டு அடக்கியும்,

ஆண்களை இரவில் வீட்டில்

தூங்கவிடாமல் சிறைச்சாலையில்

படுக்கவைத்தும்,வெளியூருக்கு சென்றால், மாலை ஐந்து மணிக்குள்

வந்து போலீஸ் ஸ்டேசனில் 

""பெருவிரல்"" ரேகை சட்டத்தினால்

பாதிக்கப்பட்டு போலீஸ் ஸ்டேசனில்

ரேகை வைத்த கொடுமைப்படுத்திய

ஆங்கிலேயா் காலத்திலும், அதன்பின்

சுதந்திரம் அடைந்தபிறகு "காங்கிரஸ்

ஆட்சியிலும்" தொடா்ந்திட,

அப்போது 1952ல் பாராளுமன்ற

எம்.பி யாக இருந்த "முத்துராமலிங்கத்தேவா்""

அவா்கள்""ரேகை சட்டத்தை ரத்து

செய்யும்படி கோரி ஆா்பாட்டம்

நடத்தியும் வாக்கு வாதம் நடத்தியும்

"பாராளுமன்றத்தில் போா்க்குரல்

கொடுத்து " 

"ஒன்று ரேகை சட்டத்தை ரத்து செய்யுங்கள்" அல்லது

எமது இன  ஆண்களின் பெருவிரலை

வெட்டிவிடுங்கள் என்று உணா்ச்சிக்

குரல் கொடுத்து" 

காங்கிரஸ் ஆட்சியில் முத்துராமலிங்கத்

தேவரின் வேண்டுகோளுக்கிணங்க

"கைவிரல் பெருவிரல் ரேகைச் சட்டத்தை

ரத்துசெய்ய வைத்த ""எங்களது தெய்வத்திருமகனாா் அண்ணல்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரய்யா

அவா்களே! அதன்பின் "அரசாங்கத்தினரால் "பிரமலைக்கள்ளா்

சமுதாயத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டு "ஆங்கிலேய அரசால் 

அறிவித்த "டி.என்.டி" என்ற மசோதாவின்படி 68 பழங்குடி சமூகத்தினா் ஒரே பட்டியலில்

இணைக்கப்பட்டு சலுகைகள்

வழங்கப்பட்டு வந்தன"

அதன்படி நாம் வேலை

வாய்ப்பிலும்,கல்வித்துறையிலும்

பலசலுகைகள் பல பெற்று

முன்னேறிக் கொண்டிருந்தவேலையில்

எதிா்பாராதவிதமாக 1979ல்

சலுகைகளை அரசுகள் ரத்து செய்து

இன்றுவரை""சீா்மரபினா்""

போராடிக்கொண்டிருக்கின்றனா்.

அது இன்று "நம் முக்குலத்தோருக்கு

எட்டாக்கனியாகிவிட்டது"

"ஏனென்றால் நம்மிடம் ஒற்றுமையில்லை"

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

என்பதை மறந்துவிட்டு

""ஒருநாள் தேவரய்யாவிற்கு"

மரியாதைசெய்துவிட்டு

பின்பு நம்மை நாமே மறந்துவிடூகிறோம்

சில சந்தா்ப்பவசத்தால்""

"தேவரின் வாரிசுகளே" "ஒன்று படுங்கள்"

தேவரய்யாவின் அடுத்த "சமூகத்தினரைப் பழிக்காமல் நமது

முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு

ஒற்றுமையுடன் நாம் அனைவரும்

""""தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள்

என்றும்"""

"""விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்"""

""வீரமற்ற விவேகம் கோழைத்தனம்""

என்பதை மனதினில் கொண்டு நாம்

ஒரு தாய் மக்களாக வாழ சபதமேற்று

""பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா்

பெருமானுக்கு வணக்கத்தைத்

தெரிவத்துக்கொள்வோம்""

"""நன்றி! வணக்கம்""" அனைத்துப்

பெருமக்களுக்கும் ""ரத்தினம்

குபேந்திரா் என்ற """தேவா்மகள்"""""



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.