சூடான், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து நல்லுறவை ஏற்படுத்த முடிவு!

 


ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அறிவித்தார்.


இதுதொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமர் அப்துல்லா ஹாம்டாக்குடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டார்.


இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடான் தலைநகர் கார்ட்டூமில் கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தற்போது அந்த சூடானே இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலஸ்தீன பிரச்சினை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. எகிப்து, ஜோர்தானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை.


பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை இஸ்ரேலை அங்கீகரிக்கக் கூடாது என்று அரபு லீக் அமைப்பு முடிவு செய்திருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.