கிறிஸ்மஸ்க்கு முன்னர் ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீள அழைக்கப்படும் - ட்ரம்ப்!!

 


ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் மீள அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


டோஹாவில் நடைபெற்று வரும், தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, ‘ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையிலான நமது வீரமிகு படைவீரர்கள் அனைவரையும் எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் திரும்பப்பெற உள்ளோம்’ என பதிவிட்டுள்ளார்.


வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடந்த கால தேர்தல் வாக்குறுதியாகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி நான்காயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.