தேயிலை உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாண்டு வேலைத் திட்டம்!

 


தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான ஐந்தாண்டு வேலைத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.


தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் கூறுகையில், “உலகிலுள்ள மிகவும் பழமையான தேயிலை ஆராய்ச்சி நிலையங்களில் எமது நாட்டிலுள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. அதற்கு 95 வருடகால வரலாறும் இருக்கின்றது.


தேயிலைத் துறையின் இதயம் என்று சொல்லும் அளவுக்கு இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை இந்த ஆராய்ச்சி நிலையம் வழங்கியுள்ளது.


இலங்கையில் தரமான தேயிலை உற்பத்திக்கும், ‘சிலோன் டீ’ என்ற நாமத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் போதுமானளவு ஆலோசனைகளையும் ஆய்வு உதவிகளையும் குறித்த நிறுவனம் வழங்கியுள்ளது.


,இதேவேளை, இலங்கையில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இலங்கையிலிருந்து தற்போது 300 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.


அதனை 350 மில்லியன் கிலோவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். இன்னும் ஐந்தாண்டுகளில் அதற்கான இலக்கு அடையப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.