விவாகரத்தான மனைவி வீட்டில் விருந்து சாப்பிட்ட பிரபல நடிகர்!
பிரபல நடிகர் ஒருவர் ஐந்து வருடங்களுக்கு முன் விவாகரத்தான மனைவியின் வீட்டில் விருந்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ஹிரித்திக் ரோஷன். இவருக்கும் சுசானா என்பவருக்கும் கடந்த 2000ம்ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த சுசானாவை தனது வீட்டிற்கு ஹிருத்திக் ரோஷன் அழைத்து வந்தார் என்ற செய்தி வெளிவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுசானா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஹிருத்திக் ரோஷனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. முன்னாள் மனைவி அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்ற ஹிருத்திக், பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியதோடு அவரது வீட்டில் விருந்து சாப்பிட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை