வரலட்சுமி சரத்குமாரின் புதிய அவதாரம்!!


 பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், ‘கண்ணாமூச்சி’ படம் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.


விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம், அடுத்ததாக ‘கண்ணாமூச்சி’ என்ற படத்தை தயாரிக்கிறது.


பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். ‘கண்ணாமூச்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.