சேமியா பக்கோடா-சிற்றுண்டி

 


தேவையான பொருட்கள்:


1. சேமியா - 200 கிராம்

2. பெரிய வெங்காயம் - 3 எண்ணம்

3. உருளைக் கிழங்கு - 1 எண்ணம்

4. இஞ்சி - 1 துண்டு

5. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

6. பச்சை மிளகாய் - 6 எண்ணம்

7. கடலைமாவு - 1மேசைக்கரண்டி

8. அரிசிமாவு - 1மேசைக்கரண்டி

9. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

10. மல்லித் தழை - 1 மேசைக்கரண்டி

11. புதினாத்தழை - 1 மேசைக்கரண்டி

12. முந்திரிப்பருப்பு - 10 எண்ணங்கள்

13. எண்ணெய் - தேவையான அளவு

14. உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. வெங்காயம், பச்சை மிளகாயை மெலிதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

2. சேமியாவை சிறிது நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து, அதன் மேல் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி உடனே வடித்து விடவும்.

3. அதில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்றி வடிகட்டியின் உதவியால் வடிகட்டவும்.

4. உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

5. அதனுடன் சேமியாவையும் இக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

6. இதனுடன் சிறிது சூடான எண்ணெய் விட்டுக் கலக்கவும்.

7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பக்கோடா போல எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.