இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா!


 ஈக்வடாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருந்ததை சீன அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஈக்வடார் கடல் உணவு தயாரிப்பு உற்பத்தியாளரான FIREXPA S.A. நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை சீன சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, ஒரு வாரத்திற்கு FIREXPA S.A. நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்ய சீன சுங்க அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால் அந்நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்ய ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்படும் என சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் கொரோனா உறுதியானால் ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என சீன சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் பெரும்பாலும் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டின் பெரும்பகுதிகளில் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

எனினும் மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் சமீபத்தில் நோய் பரவல் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.