மாமனாருடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய பெண்!!


 தமிழகத்தில் கணவரின் குடும்ப சொத்திற்கு ஆசைப்பட்ட மனைவி, அப்பாவுடன் சேர்ந்து கணவர், மாமனார் மற்றும் கணவரின் தம்பி ஆகியோரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி(70). இவர் மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவி ஆவார்.

70 வயதாகும் பத்மினிக்கு செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே படப்பையில் வசித்து வந்தனர்.

ஆனால், சொத்து சம்பந்தம் காரணமாக இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது,

பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. செந்தில்குமார் பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.

இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும் சுப்பராயன் அப்போது சொத்துக்களை பாகம் பிரித்து தந்துள்ளார்..

இதில், ராஜ்குமாருக்கு கொஞ்சம் கூடுதலாக சொத்துக்களை தந்துவிட்டார். இதனால் செந்தில்குமாரும் அவரது மனைவி மேனகாவும் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் தன்னுடைய கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் என்பவருடன் சேர்ந்து சொந்த தம்பியையே அண்ணன் ராஜ்குமார் கொலை செய்தார். .

இதற்கு மேனகாதான் மூளையாக இருந்துள்ளார். இந்த கொலை வழக்கில் செந்தில்குமார் சிறைக்கு சென்றுவிட, இந்த சமயத்தில் மேனகாவுக்கு கார் டிரைவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தண்டனை முடிந்து வெளியே வந்த செந்தில்குமார், மேகனாவின் செயலை கண்டு அதிரந்து போனார். கள்ளக்காதலுக்கு கணவன் தடையாக வந்ததால், கணவனையும் கார் டிரைவருடன் சேர்ந்து கொலை செய்ய பிளான் செய்தார்.

அதன்படி கடந்து 2018-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செந்தில்குமாரை ஏமாற்றி செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கல் என்ற இடத்துக்கு வரவழைத்து கொலை செய்து, அங்கேயே புதைத்தனர்.

ஆனால் மாமனார் இருக்கும்வரை சொத்து கிடைக்காது என்று புருஷனை கொன்ற பிறகுதான் தெரிந்தது.. அதனால், மாமனாரையும் கொல்ல முடிவு செய்தார் மேனகா.

அதன்படி, காதலன் மற்றும் தன்னுடைய அப்பா அருணுடன் சேர்ந்து மாமனாரையும் கொன்று புதைத்தார். இந்த கொலை செய்த பிறகுதான் தெரிந்தது, மாமியார்தான் பத்மினியை கடத்தினால் சொத்து கிடைக்கும் என்று நினைத்து, கடந்த 2018-ல் அவரை கடத்தி சென்றார். ஆனால் சிசிடிவி கமெரா உதவியுடன் அயனாவரம் பொலிசார் நடவடிக்கை எடுத்து பத்மினியை மீட்டனர்.

அப்போதுதான், பத்மினி தனது மகன் காணவில்லை என்று நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போதுதான் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணா பொலிசாரிடம் சிக்கினார்.

கொலைகளை மேனகாவுடன் சேர்ந்து செய்ததை ஒப்புக் கொண்டதுடன், புதைக்கப்பட்ட செந்தில்குமாரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த கொலைக்கு உதவியாக இருந்த ஹரிகிருஷ்ணன், அன்பு, உள்ளிட்ட 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

இதில் மேனகாவின் அப்பா அருண் சிறையில் இருந்து வந்துவிட, ராஜேஷ்கண்ணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஆனால் எல்லா கொலைகளுக்கும் காரணமான மேனகா தலைமறைமாகிவிட்டதால், பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.