குருவிட்டவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

 இரத்தினபுரி, குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு வேகமாக பயணித்த வேனொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குருவிட்டவில் அமைந்துள்ள பலசரக்கு கடையொன்றில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரும், கடையின் உரிமையாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.