13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!

 


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.  ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு சீசனில் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

  • அதிக ரன்கள் அடித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி -  கேஎல் ராகுல் (14 போட்டிகளில் 670 ரன்கள்)
  • அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி: ரபாடா (30 விக்கெட்டுகள்) 
  • வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)
  • ஃபேர் பிளே விருது -  மும்பை அணி 
  • கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்) 
  • சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - பொல்லார்டு (மும்பை)
  • அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான் கிஷண் - (மும்பை- 30 சிக்சர்)
  • பவர் பிளேயர் விருது - டிரெண்ட் போல்ட் (மும்பை)
  • மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.