உடைகள் கிழிக்கப்பட்டு வீட்டில் இறந்து கிடந்த பெண்!


 தமிழகத்தில் 45 வயதான பெண் வீட்டில் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் உள்ள குருக்கத்தான் சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (45).

இவர் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.

சாந்தி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கோலம் போடுவதற்காக காலையில் தினமும் வீட்டில் வெளியே வரும் அவர் நேற்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை. ஒரு கதவும் லேசாக திறந்து கிடந்தது.

சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது சாந்தி கழுத்தறுக்கப்பட்டு, வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்தியின் சேலை, ஜாக்கெட் கிழிக்கப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் கிடந்ததால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா எனவும் மற்றும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Blogger இயக்குவது.