வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

 


இலங்கைக்கு திரும்ப முடியாது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜப்பானில் சிக்கியிருந்த 31 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்த 20 இலங்கையர்கள் நேற்றிரவு 10.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே -648 விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் ஜப்பான் நரிட்டோவிலிருந்து 16 இலங்கையர்கள் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -455 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.