போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!


 கொரோனா தொற்று பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள அலுவல செயற்பாடுகள் காரணமாக யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்து தமக்கான சேவைகளை மக்கள் பெறமுடியுமென மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் எமது அலுவலகத்தினால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் புதிய மோட்டார் சைக்கிள்களிற்கான உரிமை மாற்றம் அதாவது வடமாகாணத்திற்குள் உள்ளேயுள்ள மோட்டார் சைக்கிள்களின் உரிமை மாற்றம் என்பவற்றிற்கு மேலதிகமாக எமது தலைமைக் காரியாலயத்தினால் ஏனைய வாகனங்களையும் எமது யாழ் மாவட்ட நிர்வாக பிரதேச எல்லைக்குட்பட்ட உரிமை மாற்றம் செய்துகொள்ளக்கூடிய வகையில் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் யாழ் மாவட்டத்திற்குள் வசிக்கின்ற மக்கள் தங்களுடைய வாகனங்களிற்கான உரிமை மாற்ற சான்றிதழ்களிற்கான விண்ணப்பங்களை எமது அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக பிரதேச செயலகங்களிற்கோ அல்லது கொழும்பிற்கோ செல்ல வேண்டிய தேவையில்லை. இந்த வகையில் இந்த சேவைகள் எமது மாவட்ட செயலகத்திற்கு பரவலாக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு வாகனங்களை உரிமைமாற்றம் செய்ய விரும்புபவர்களிற்கு எமது அலுவலகத்தினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

தற்போதைய கொரோனா தொற்று வைரஸ் காரணமாக இவ்வாறான முற்பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதாவது மக்களை கூடியளவிற்கு நெருக்கடியாக கூடியிருக்க அனுமதிக்காத முறையில் நாங்கள் முற்பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

அந்த தொலைபேசி இலக்கங்கள் 0706354155, 0706354156 இந்த இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு வாகனங்களை உரிமை மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த மாவட்ட எல்லைக்குள் முற்பதிவுகளை செய்து புதிய விவரங்களை பெற்று அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உரிய தினத்தில் வந்து தமது உரிமை மாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும்.

இதன் மூலம் தமக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் மற்றவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ள முடியுமென மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.