யுத்தத்தை வென்ற எம்மால் பொருளாதார சவாலையும் வெல்ல முடியும்!


 நான் வெற்றி பெற்றேன் அல்லது தோல்வியுற்றேன் என்பது மக்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் எதிரிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட போலிப் பிரச்சாரத்தால் அல்ல என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்று ஓரண்டு நிறைவை முன்னிட்டு இன்று (18) இரவு 8.30 மணிக்கு ஆற்றிய தேசிய உரையிலேயே இதனை தெரிவித்தார். மேலும்,

“வாக்குகளுக்காக எவருடைய தயவையும் பெற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. எம்மால் போரை வெல்ல முடியுமாயின், நாம் ஒன்றிணைந்து பொருளாதார சவால்களையும் சமாளிக்கவும் முடியும்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 69 இலட்சம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். நாட்டை பாதுகாப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. குறுகிய காலப்பகுதியில் அதனை எம்மால் செய்ய முடிந்தது.

வெளிநாட்டு மக்களின் கீழ் இயங்கி, உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் யுகம் நிறைவடைந்துள்ளது. தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தை பெற்று இலங்கை முன்னோக்கி நகர்கிறத.

நாட்டில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும். பல்வேறு இடங்களில் புதிய பீடங்கள் உருவாக்கப்படும். பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் 4000 வீடுளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார்.

அத்துடன் புலனாய்வு பிரிவை மறுசீரமைத்து, நாட்டில் எந்தவொரு தீவிவாதமும் மீண்டும் தலை தூக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Blogger இயக்குவது.