படிவத்தை பெற மட்டக்களப்பில் 20,000 இலஞ்சம்!
ஒரு இலட்சம் வேலை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கே மட்டக்களப்பிலுள்ள அரச அமைச்சர்கள் 20,000 ரூபா இலஞ்சம் வாங்கியுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று (11) கல்முனையில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு இலட்சம் வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது பாரியளவில் ஊழல் நடைபெறுகிறது. மட்டக்களப்பில் வேலைவாய்ப்பு ஆவணங்களை மக்களிடம் வாங்குவதற்கு அரசாங்க அமைச்சர்களே 20,000 ரூபா இலஞ்சம் வாங்கியுள்ளனர். அம்பாறையில் சொந்த வாகனம் வைத்திருப்பவருக்கு அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதில் நிறைய முறைகேடு வழங்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். இதை மீள் பரிசீலனை செய்து, உரிய முறையில் வழங்க வேண்டும். நீங்கள் செய்த பிரச்சாரம் இப்படியிருந்தது, ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை துறைசார்ந்த அதிகாரிகளுடன் பேசி, விரைவில் தீர்வை கொண்டு வருவோம் என்றார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை