வட, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டாமா?


 

நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியதால் குழப்பம்!

“30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்தீர்கள். அவர்களது பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டாமா?”

இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி இன்று (21) சற்றுமுன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். மேலும்,

வடக்கு – கிழக்கின் இக்கட்டு நிலையை தொடர்ந்தும் பேணுவதே இந்த அரசின் நோக்கமாகும். வடகிழக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக உட்கட்டமைப்பை அமைக்கிறீர்கள். வீதிகளையே அமைக்கிறீர்கள். வறுமையில் வாடும் மக்களை விடுத்து அபிவிருத்திக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட எம்பி ஒருவர் ‘கஜேந்திரகுமார் இனவாதம் பேசுகிறார்’ என்றும், மற்றொரு எம்பி ‘தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு யார் காரணம், அவர்களை இராணுவமே காப்பாற்றியது’ என்று தெரிவித்தனர்.

பின்னர் சுரேன் ராகவன் எம்பி ‘தான் ஆளுநராக இருந்த போது 87 ஆயிரம் பேரை இந்தியாவில் இருந்து மீள அழைத்து வர முயன்ற போது கூட்டமைப்பு தடுத்தது’ என்றார். குறுக்கிட்ட செல்வம் அடைக்கல நாதன் எம்பி ‘அவர் பொய் சொல்கிறார்’ மக்களை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் செயற்பாட்டுக்கு நாம் ஆதரவாக இருந்தோம்’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.