கொரோனா தொற்று உறுதியானதும் காதலியின் வீட்டுக்குள் பதுங்கியிருந்த 22 வயது இளைஞன்!


 கொரோனா தொற்று உறுதியானதும், காதலி வீட்டிற்கு சென்று பதுங்கியிருந்த நபர் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காதலியும், குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆனமடுவ பொதுச் சுகாதார பரிசோதகர் சமன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த 22 வயது இளைஞருக்கே கொரோனா தொற்று உறுதியானது. அவர் ஆனமடுவ, மருங்கொட, மஹா உஸ்வேவ எச் கிராமத்தில் வசிப்பவர்.

அந்த இளைஞன் கொழும்பு துறைமுகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். கொழும்பில் மூன்று நாட்களின் முன் அவரது உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டது. தனக்கு கொரோனா தொற்று உறுதியானதும், காதலி வீட்டிற்கு வந்து பதுங்கியிருந்துள்ளார்.

காதலி வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் ஆனமடுவ சதொச நிலையத்திற்கு சென்று பொருட்கள் வாங்கினார். அருகிலுள்ள சில கடைகளிற்கும் சென்றார். ஆனமடுவ பிரதேசசபை, அந்த வர்த்தக நிலையங்களில் கிருமி நீக்கம் செய்துள்ளது.

காதலி, இரண்டு சகோதரர்கள், தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.