பந்து எடுக்க சென்ற மாணவன் மீது துப்பாக்கி சூடு!


 கொழும்பு – மஹரகம, எரவல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது நேற்று (22) மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாணவன் காயமடைந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

குறித்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற போதே இவ்வாறு வாயு துப்பாக்கி ஒன்றால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.